ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதி சாலையில் குட்டியுடன் கரும்புத் துண்டுகள் சாப்பிடும் யானையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே நேற்றிரவு காட்டு யானை ஒன்று குட்டியுடன் உலா வந்தது. அப்போது சாலையில் கிடந்த கரும்புத்துண்டுகளை கண்டதும் அவை இரண்டும் அதை எடுத்து ருசித்தபடி தின்றன.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.