சென்னை கொடுங்கையூரில் ஒரு விசாரணைக் கைதி மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அன்பு என்கின்ற ராஜசேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்த போலீசார், இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல்.
முதல் முதல்கட்ட தகவலின்படி, சொத்து தொடர்பான ஒரு புகாரின் பேரில் ராஜசேகரை அழைத்து வரும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.