புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதியும், சோனியா காந்தி கடந்த 8-ம் தேதியும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் கோரிக்கையை ஏற்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.