தங்களை எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து பேசிய சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்க், எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பன்முகத்தன்மை என்ற போர்வையில் பிற நாடுகளை அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறினார்.
தைவான் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், வெய் ஃபெங்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பெயரில் குழுவை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது மோதலை உருவாக்குவதற்கான உத்தி என்றும் சீன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.