தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று பரவல அதிகரித்து வருகிறது.
எனவே, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி செலுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்கள் இன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 3,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. எனவே, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.