தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவத் துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களை, உருமாறிய கொரோனா அதிகம் தாக்கும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.தடுப்பூசி போடாத ஒரு கோடி 63 லட்சம் பேரை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. மேலும், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ போட்டுக் கொள்ளலாம்.