திருச்சியில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் வயதுமுதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. இவரது குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது என்றாலும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தார்.
இவருக்கு, 2 மகன்கள், 4 மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 முறை சிறை சென்றுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய பெருமைக்குரிய இவர் மொரார்ஜி தேசாய், சஞ்சீவரெட்டி, கக்கன், விஷ்ணுராம் மேதி, அறிஞர் அண்ணா உள்ளிட்டோருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.