திருச்சி மாவட்டத்தில் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருச்சி மாவட்டம் அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருச்சி மாவட்டம் உறையூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதில் குறிப்பாக பஞ்சவர்ணசுவாமி கோயில் தெரு, தக்கார் சாலை, நவாப் தோட்டம், மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், பொதுமக்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் 9498794987 என்ற டாங்கெட்கோ உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல், உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் உத்தமபாளையம் நகர் மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கனிபிரியா டி.பி. முதல் பி.டி.ஆர். காலனி வரை உள்ள காளவாசல், வண்ணாந்துரை, கோர்ட்டு வளாகம், தென்னஞ்சாலை, கோகிலாபுரம் சாலை, ஒயின்பேக்டரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.