தேனியில் சாலை விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த தேனி ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளுக்காக காரில் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் தேனி பங்களாமேட்டில் டூவீலரில் வந்த முதியவர் ஒரு வாகனத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனை அறிந்த தேனி ஆட்சியர் முரளிதரன் உடனே காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள பொதுமக்களின் உதவியோடு முதியவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வேலைக்கு நடுவில் காரை நிறுத்தி முதியவருக்கு உதவிசெய்த தேனி ஆட்சியரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM