ராசிபுரம் அருகே போக்குவரத்தை சரி செய்த போலீசார் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் நிலைய தலைமை காவலர் தேவராஜன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.