பரோலில் வந்த மத்திய சிறை கைதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் பாறைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கொலை வழக்கு ஒன்றில் சீவலப்பேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 7ஆம் தேதி பரோலில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அடுத்து நேற்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.