விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஏராளமானோர் சொந்த ஊர் திரும்புவதால் தனியார் பேருந்துகளில் 20% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி திறப்பு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், சாதாரண நாட்களில் திருச்சி – சென்னை இடையே தனியார் பேருந்துகளில் 800 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்பொழுது 3 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.