பாஜக எம்பி ஒரு கிலோ எடையை குறைத்தால் ரூ.1000 கோடி தொகுதி நிதி வழங்குவேன் – நிதின் கட்கரி

உடல் எடையை ஒரு கிலோ குறைத்தால் ஆயிரம் கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதி வழங்குவதாக பாஜக எம்.பி.யிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உஜ்ஜியினி மக்களவை தொகுதி உறுப்பினரான அனில் பிரோஜியா, தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறினார்.
₹ 1,000 Crore For Each Kg Lost, Nitin Gadkari's Funding Dare For BJP MP, BJP  MP Anil firojiya, BJP MP Anil firojiya 15 kg weight loose, BJP MP Anil  firojiya weight lose, |
அப்போது அவருக்கு ஒரு நிபந்தனை விதித்ததாக கூறிய நிதின் கட்கரி, உடல் எடையை குறைத்துக் கொண்டால் ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நகைச்சுவையாக கூறியதாக தெரிவித்தார். தனது நிபந்தனையை ஏற்ற அவர் தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
அனில் பிரோஜியா தனது உணவு முறையை மாற்றி அமைத்ததோடு, தினமும் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் யோகா போன்றவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதாக கட்கரி தெரிவித்தார்.

BJP MP from Ujjain @bjpanilfirojiya is on a mission to shed excess flab, not just to become fit, but also to fund the development of his Lok Sabha constituency as promised by Union Minister @nitin_gadkari @ndtv @ndtvindia pic.twitter.com/t7qv7K0FAB
— Anurag Dwary (@Anurag_Dwary) June 11, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.