பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தாஸ்வின், பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்த நிலையில், அவர் கட்சிப் பொறுப்பில் சரியாக செயல்படாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.