பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை பெறுவாரா ஜனாதிபதி மக்ரோன்?


தேர்தலில் வெற்று பெற்று இரண்டு மாதங்களே நிறைவடைந்து இருக்கும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பிற்கு செல்லுகிறார்.

பிரான்ஸ் நாட்டில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்டு இருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron),  நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், மெலன்சோன் தலைமையிலான புதிய இடதுசாரி கூட்டணி வலுவாக எதிர்கொள்கிறார்.

பிரான்ஸ் முழுவதும் உள்ள 577 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு சுமார் 289 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், மக்ரோனின் கூட்டணிக் கட்சி 270 முதல் 310 நாடாளுமன்ற இடங்கள் வரை வெற்றிப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை பெறுவாரா ஜனாதிபதி மக்ரோன்?Reuters

ஆனால் Elabe கணிப்பின்படி இந்த தேர்தலில் இடதுசாரிகள் 170 முதல் 220 இடங்கள் வரை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நல்ல அதிகரிப்பு என தெரியவந்துள்ளது.

மேலும் மக்ரோனின் கூட்டணிக்கு 289 என்ற பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், 40 என்ற எண்ணிக்கை வரை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்புகள் தெரிவந்துள்ளன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை பெறுவாரா ஜனாதிபதி மக்ரோன்?Reuters

577 தொகுதிகளுக்கு இரண்டு சுற்றுகளாக நடைபெறும் தேர்தலில், முதல் சுற்று இன்று ஜூன் 12ம் திகதி நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவுகள் ஜூன் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவ வீரர்: ”உண்மையான ஹீரோ” என தந்தை உருக்கம்!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை பெறுவாரா ஜனாதிபதி மக்ரோன்?Reuters

ஜூன் 19ம் திகதியின் இறுதியில் யார் பெரும்பான்மையை வெல்வார்கள் என்பதற்கான எந்தவொரு தீர்க்கமான சமீக்கைகளும் முதல் சுற்றின் முடிவில் தெளிவாக தெரியவில்லை.

அத்துடன் இந்த தேர்தலில் ஜனாதிபதி மக்ரோனின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றினால் மட்டுமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி மேக்ரானால் செயல்படமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.