நம்மில் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போம். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை மாத்திரைகளால் மட்டும் கட்டுப்படுத்திவிடலாம் என்று யோசிப்போம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் மாற்றங்கள் மற்றும் உணவு முறையில் செய்யப்படும் மாற்றம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இந்த 4 உணவுகளை தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
கீரை வைகள்: கேல் கீரை, லெட்யூஸ் போன்ற கீரை வகைகளில் பொட்டாஷியம், மான்கனிஸ், கால்ஷியம் , ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் சத்து நம் உடலில் இருக்கும் அதிக சோடியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது.
வாழைப்பழம்: இதில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.
பீட்ரூட்: இதில் நைட்ரிக் ஆக்ஸைட் ( nitric oxide) இப்பதால், நமது ரத்த குழாய்கள் நன்றாக திறக்க உதவுகிறது.
பூண்டு : இதில் ஆன்டிபயாடிக் இருப்பதால், நமது சதைகளை ஓய்வெடுக்க வைக்கிறது. மேலும் ரத்த குழாய்கள் விரிவடைகிறது. இதனால் ரத்தம் அழுத்தம் குறைகிறது.