இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் காட்டு யானையிடம் மிதிப்பட்டு உயிரிழந்தது மட்டுமின்றி, அவரது உடல் கூட அந்த யானையின் கோபத்திற்கு ஆளானது பொலிஸார் தெரிவித்தனர்.
மாயா முர்மு (Maya Murmu) 70, வியாழக்கிழமையன்று காலை ராய்பால் கிராமத்தில் உள்ள ஒரு குழாய் கிணற்றில் தண்ணீர் சேகரித்துக்கொண்டிருந்தபோது, டால்மா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வழி தவறி வந்த காட்டு யானையால் தாக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வீட்டு குளியறையில் சடலமாகக் கிடந்த பிரபல கோடீஸ்வர பெண்! அருகே இருந்த ஒரு பொருள்
யானை அவரை மிதித்தது, அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராஸ்கோவிந்த்பூர் காவல் நிலைய ஆய்வாளர் லோபமுத்ரா நாயக் கூறினார்.
மாலையில், மாயா முர்முவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தபோது, அதே யானை திடீரென அங்கு வந்து தகனம் செய்வதற்காக மரக்கட்டைகள் இது வைக்கப்பட்டிருந்த அவரது உடலை எடுத்தது.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!
யானை மீண்டும் அவரது சடலத்தை மிதித்து எறிந்துவிட்டு தப்பி ஓடியது. சில மணி நேரங்களுக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.