பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச பொசொன் வைபவம் மிஹிந்தலை புனிதபூமியில் நடைபெறுகிறது. இன்று தொடக்கம் அனுராதபுரம், மிஹிந்தலை உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது திருடர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் இது குறித்து உஷார் நிலையில் உள்ளனர்.
இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக சுமார் இரண்டாயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது