போராட்டக்காரர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ.. அகிலேஷ் யாதவ் கேள்வி ?

முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். 

ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மோதலின்போது கற்கள் வீசப்பட்டன.

அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் போராடிய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பலரது வீடுகளை அம்மாநில அரசு இடித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், போராடியவர்களை காவல்நிலையம் பிடித்துச்சென்று போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோவை உத்தரபிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

vxv

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அம்மாநில போலீசார் மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, இதுபோன்ற லாக்அப் தாக்குதல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். போலீஸ் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உ.பி., மனித உரிமை மீறல்களில் முதலிடத்தில் இருப்பதாகவும், பட்டியலினத்தவர்கள் ஒடுக்கப்படுவதில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார், என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த ட்விட்டர் பதிவு வைரலான பிறகு, சஹாரன்பூர் எஸ்எஸ்பி ஆகாஷ் தோமர் கூறியதாவது, நான் இன்னும் வீடியோவைப் பார்க்கவில்லை, ஆனால் அது சஹரன்பூரிலிருந்து இல்லை. அது எங்கிருந்து வருகிறது அல்லது என்ன சூழல் என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து விசாரித்து, போலீசார் யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம், என்றார்.

newstm.in
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.