மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இலங்கையின் கொள்கையானது ஒவ்வொரு செயற்திட்டத்தையும் மிகவும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் உரிய முறைமையிலும் வழங்குவதாகும். இலங்கைக்கு மின்சக்தி அத்தியாவசியமாக உள்ள இச்சந்தர்ப்பத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை தொடர்பில் பாரியளவிலான திட்டங்களுக்கு கிடைக்கும் கேள்வி குறைவாக உள்ளதால், அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டாலும், செயற்திட்டங்களுக்காக நிறுவனங்களைத் தெரிவு செய்யும்போது அரச கொள்கைகளுக்கேற்ப வெளிப்படையான செயல்முறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
12.06.2022