IAS officers transferred in Tamilnadu, Health secretary Radhakrishnan transferred: தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா; ஆளுநரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, வணிக வரித்துறை செயலாளராக இருந்த பணீந்தர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ், வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக இருந்த நசீமுதீன் ஐ.ஏ.எஸ், தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் முதன்மைச் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ், நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ், வணிக வரித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.