கடந்த 5 அமர்வுகளாகவே இந்திய சந்தையானது கடும் ஏற்ற இறக்கத்தினை கண்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளனர் எனலாம்,
அதிலும் ரிசர்வ் வங்கியானது வட்டி அதிகரிப்பினை செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், எதிர்பார்த்ததை பலவே வட்டி விகிதமும் அதிகரிப்பட்டது.
எனினும் வரும் வாரத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதலீட்டாளார்கள் மிக கவனமுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
பிளிப்கார்டில் ரூ.2060 கோடி முதலீடு செய்த சீன நிறுவனம்.. உண்மையா?
மோசமான காரணிகள்
ஏற்கனவே பெரியளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறத் தொடங்கி விட்டன, அதன் எதிரொலியோ இந்த சரிவு எனலாம். மேலும் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பணவீக்கம் என்பது மிக மோசமான ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வருகின்றன. இதனை சரி செய்ய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது நீண்டு கொண்டுள்ளது.
ரூ.5.16 லட்சம் கோடி காலி
இதற்கிடையில் முதலீடுகள் வெளியேற்றம், ரூபாய், பணவீக்க தரவு, அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டம் என பலவும் சந்தையில் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. இதற்கிடையில் தான் கடந்த வாரத்தில் சந்தையில் முதலீட்டாளர்கள் 5.16 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவுக்கு இழப்பினை கண்டுள்ளனர். டாப் 10 நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளன. இதில் எல்ஐசி மோசமாக இழப்பினை கொடுத்துள்ளது.
எவ்வளவு சரிவு?
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்ஸி நிறுவனங்கள் கூட பலத்த இழப்பினை கொடுத்துள்ளன. பி எஸ் இ தரவுகளின் படி, ஈக்விட்டி சந்தையின் மூலதனம் 251.84 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது ஜூன் 3 அன்று 2.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
சென்செக்ஸ் & நிஃப்டி வீழ்ச்சி
கடந்த 5 அமர்வுகளில் சென்செக்ஸ் 1465.79 புள்ளிகள் அல்லது 2.63% சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 50 382.5 புள்ளிகள் அல்லது 2.31% சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் சென்செக்ஸ் 1016.84 புள்ளிகள் அல்லது 1.84% சரிவினைக் கண்டு, 54,303.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 276.30 புள்ளிகள் அல்லது 1.68% சரிவினைக் கண்டு, 16,201.80 புள்ளிகளாகவும் முடிபடைந்துள்ளது.
எல்ஐசி மிகப்பெரிய சரிவு
எல்ஐசி-யின் சந்தை மதிப்பானது கடந்த வாரத்தில் மிகப்பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பானது 57,271.85 கோடி ரூபாய் குறைந்து, 4,48,885.09 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
தற்போது இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் எக்ஸ்சேஞ்சில் 7 வது இடத்தில் சந்தை மதிப்பின் அடிப்படையில் உள்ளது. எல்ஐசி கடந்த மே 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் சந்தை மதிப்பானது 1.51 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஐபிஓ விலை 949 ரூபாயாகவும், இதன் சந்தை மதிப்பு 6,00,240 கோடி ரூ[பாயாகவும் இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் & டிசிஎஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 44,311.19 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டு, 18,36,039.28 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே ஐடி ஜாம்பவான் ஆன டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 45,746.13 கோடி ரூபாய் குறைந்து, 12,31,398.85 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இன்ஃபோசிஸ் & ஹெச் டி எஃப் சி வங்கி
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 6,21,502.63 கோடி ரூபாயாகும். தற்போதைய நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 4வது இடத்தில் உள்ளது.
இதே ஹெச் டி எஃப் சி வங்கியின் சந்தை மதிப்பானது 16,433.92 கோடி ரூபாய் குறைந்தும் 7,49,880.79 கோடி ரூபாயாக உள்ளது.
எஸ்பிஐ & ஐசிஐசிஐ வங்கி
எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் 2231.15 கோடி ரூபாய் குறைந்து, 4,12,138.56 கோடி ரூபாயாக குறைன்ய்துள்ளது.
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 16,305.19 கோடி ரூபாய் குறைந்து, 5,00,744.27 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி 6வது இடத்திலும், எஸ்பிஐ 8வது இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
ஹெச்யுஎல் & ஹெச் டி எஃப் சி
எஃப் எம் சி ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் 5வது நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பானது, 21,674.98 கோடி ரூபாய் குறைந்து, 5,16,886.58 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச் டி எஃப் சி-யின் சந்தை மதிப்பானது 17,879.22 கோடி ரூபாய் குறைந்து, 3,95,420.14 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 7,359.31 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 3,36,613.44 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ஹெச் டி எஃப் சி 9வது இடத்திலும், பார்தி ஏர்டெல் 10வது இடத்திலும் சந்தை மதிப்பின் அடிப்படையில் உள்ளன.
investors lose over Rs.5.16 lakh crore in market capitalization, Nearly half of losses in top 10 companies
Investors in the market last week saw a loss of Rs 5.16 lakh crore. The top 10 companies have suffered huge losses. In which LIC has given bad losses.