மேட்சிங் ட்ரெஸ் எப்படி பண்றதுனு தெரியுமா? இவங்கள்ட கத்துகலாம் வாங்க… #Photogallery

Rajarani 2 Serial Actress Riya Photo Gallery : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தொடங்கப்பட்ட 2-சீசன் ஒரு சில எபிசோடுகள் கடுப்பை ஏற்படுத்தினாலும் ஒரு சில எபிசோடுகள் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

தற்போது இந்த சீரியலில், கோவிலில் புகுந்த தீவிரவாதிகளை சந்தியா ஒற்றை ஆளாக பிடித்து கொடுத்திருகிறார். இதுவரை பரபரப்பின் உச்சமாக இருந்த சீரியல் மீண்டும் குடும்ப சூழ்ச்சிக்குள் செல்ல உள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தியாவாக ஆல்யா மானசா நடித்து வந்த இந்த சீரியலில் தற்போது அவர் பிரசவத்தின் காரணமாக விலகியதை தொடர்ந்து தற்போது ரியா என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார். ஆல்யா மானசா போன்று இவரக்கும் இந்த சீரியலில் நல்ல வரவேற்பு  கிடைத்து வருகிறது..

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இநத வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பொதுவாக ட்ரெஸ் பண்ணும்போது மேட்ச்சுக்கு மேட்ச்சாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நமக்கு சொல்லித்தரும் விதமா நடிகை ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் அவரின் ட்ரெஸ் கோடுக்காக வைரலாகி வருகிறது. மேட்ச்சாக ட்ரெஸ் பண்ணுவது எப்படி என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.