தற்போது நிலவும் எரிபொருள்நெருக்கடிக்குத் தீர்வாக எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்யா அரசாங்கம் நாட்டிற்கு கோதுமையை வழங்குகின்றது என்றும்அவர் குறிப்பிட்டார். இந்த கோதுமையுடன் எரிபொருளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் கூடுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இந்த நெருக்கடியை தாமே ஏற்படுத்திக் கொண்டதாகவும் அசோசியேட்டஸ் பிரஸ்-உடன்இடம்பெற்ற நேர்காணலில் பிரதமர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துஎரிபொருள் நிலக்கரியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருகின்றது. பொருளாதாரமேம்பாட்டிற்கான திட்டத்தை அடையாளம் கண்டு அத்திட்டத்திற்கு சீனா அல்லது ஏனையநாடுகளிடம் கடனை பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். சீன-கடன் கட்டமைப்பு தொடர்பில்சீனாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. கொவிட் தொற்றின் போதுஅதற்கமைவாக இடம்பெற்ற தவறான முகாமைத்துவம், வரி குறைப்பு, சில முரணான கொள்கை ரீதியானதீர்மானம் என்பன இந்த நெருக்கடிக்கு காரணமாகும். யுக்ரேன் யுத்தத்துடன் இந்த நிலைமோசடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.