வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், வட கொரியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக சோ சோன் ஹுய் என்கிற பெண் நியமிக்கப்பட்டார்.
நீண்ட காலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான் ஹூய், அந்நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் பெண் ஆவார். ஏற்கனவே இவர் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். தென் கொரியா உடனான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான் – குவானுக்குப் பதிலாக சோ சான் ஹூய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அரசு ஊழியர்கள் கார் வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
சோ சான் ஹூய் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கூடியவர். அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது கிம்முக்கு சோ நெருங்கிய உதவியாளராக இருந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் ஹனோய் உச்சி மாநாட்டிக்கு கிம்முடன் சோ சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.