தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சின்னச்சாமி கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டியில் சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்து மிகவும் கடுமையான உழைப்பினாலும் மனைவி சுசிலாவின் தன்னம்பிக்கையாலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் `ஜோதீஸ் ஓட்டல்’ என்றொன்றை உருவாக்கியுள்ளனர்.
பல்வேறு தரப்பினரடமும் பாராட்டு பெற்றுள்ள இந்த அசைவ உணவகத்தின் உள்ளே நுழையும் பொழுதே தட்டுகளில் அடுக்கடுக்காக அசைவ உணவங்கள் மட்டன், சுக்கா, குடல், தலைக்கறி, ஈரல், சுவரொட்டி, மூளை, ரத்த பொரியல், செட்டிநாடு சிக்கன்,பள்ளிபாளையம் சிக்கன், சிக்கன் ஈரல், நாட்டு கோழி, வான்கோழி, கறி கோழி, வாத்து கறி, வயல் நண்டு, கடல் நண்டு, முயல், புறா, கறி, கிரேவி உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த உணவகத்துக்கு புதிய தலைமுறை சார்பாக ஒரு விசிட் அடித்தோம். அப்போது இந்த ஹோட்டலின் பல முக்கிய விஷயங்களை கண்டோம். அந்தக் காணொளியை இங்கு காண்க!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM