விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வீட்டில் விருந்து அளித்து பாராட்டினார்.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசூலை வாரி குவித்துவரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் சிரஞ்சீவி நேற்று இரவு தனது வீட்டில் விருந்து அளித்து பாராட்டினார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் பங்கேற்றார்.