வங்காளதேசத்தில் விரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. சிலேட் நோக்கி சென்ற பராபத் விரைவு ரயில் என்ஜினில் திடீரென தீ பற்றியது.
தீ மெல்ல பரவி பயணிகள் பெட்டிகளிலும் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலின் இரு பெட்டிகள் தீயில் கருகி சாம்பலாகின.