இளைஞரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி, மேல அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காஅலை ஆகாஷ் மேலகல்கண்டார் கோட்டை சுடுகாடு பகுதியில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆகாஷ் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, இந்த்ன சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.