ஸ்வீடன் இல்லாமல் நோட்டோவில் பின்லாந்து இல்லை: ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ அதிரடி!


மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் நார்டிக் நாடான ஸ்வீடன் இல்லாமல் பின்லாந்து இணையாது என அந்த நாட்டின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை தொடர்ந்து, அணிச்சேரா கொள்கையில் இருந்த ரஷ்யாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தனர்.

மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் புதிய உறுப்பினர்கள் இணைய வேண்டும் என்றால், அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளும் அனுமதி வழங்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.

ஸ்வீடன் இல்லாமல் நோட்டோவில் பின்லாந்து இல்லை: ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ அதிரடி!

நோட்டோ ராணுவ கூட்டமைப்பிற்கு பின்லாந்து மற்றும் ஸ்வீடன் வருகை தர விருப்பம் தெரிவித்ததை அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் போலந்து போன்ற நோட்டோ நாடுகள் முழுமையாக வரவேற்ற நிலையில், முக்கிய நோட்டோ நாடான துருக்கி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதுத் தொடர்பாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்த குற்றச்சாட்டில், துருக்கியில் நாசவேளைகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான குர்திஷ் போராளிகளுக்கு ஸ்வீடன் தான் தலைமை இடமாக இருந்து செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்து ஸ்வீடனின் நோட்டோ விருப்பத்தை மறுத்தார்.

ஸ்வீடன் இல்லாமல் நோட்டோவில் பின்லாந்து இல்லை: ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ அதிரடி!

இந்தநிலையில், Helsinki-ல் ஞாயிற்றுகிழமையான நேற்று பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோவுடன் (Sauli Niinisto) இணைந்து செய்தியாளர்களை சந்தித்த நோட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ( Jens Stoltenberg) துருக்கியின் கவலைகள் நியாமானது, தீவிரவாதத்தை பற்றியது மற்றும் ஆயுத ஏற்றுமதியை குறித்தது என தெரிவித்தார்.

நோட்டோ நாடுகளிலேயே துருக்கி அளவிற்கு வேறு எந்த நாடுகளும் தீவிரவாதத்தை இவ்வளவு எதிர்கொண்டது இல்லை என தெரிவித்தார்.

அத்துடன் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், ஆனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் குறித்த எந்த அறிகுறியும் இல்லை எனவும் சவுலி நினிஸ்டோ மற்றும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இணைந்து தெரிவித்தனர்.

ஸ்வீடன் இல்லாமல் நோட்டோவில் பின்லாந்து இல்லை: ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ அதிரடி!

கூடுதல் செய்திகளுக்கு: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை பெறுவாரா ஜனாதிபதி மக்ரோன்?

இதனைத் தொடர்ந்து பேசிய பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்தின் நீண்டகால நட்பு நாடான ஸ்வீடன் இல்லாமல் பின்லாந்து இணையாது என தெரிவித்தார். 

ஸ்வீடன் இல்லாமல் நோட்டோவில் பின்லாந்து இல்லை: ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ அதிரடி!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.