3-வது நபருடன் தப்பிய மனைவி பற்றி புகாரளித்த முதல் 2 கணவர்கள் – நாக்பூரில் நடந்த சம்பவம்!

மருதமலை படத்தில் வரும் வடிவேலு காமெடியைபோல மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் மூன்றாவது நபருடன் தப்பிய தனது மனைவியை கண்டுபிடித்து தரச்சொல்லி இரண்டு கணவர்கள் போலீஸாரை அணுகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக பரோசா சிறை போலீஸார் தரப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு 2016ம் ஆண்டே திருமணம் நடந்திருக்கிறது. அவரது முதல் கணவருக்கும் அவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
இப்படி இருக்கையில் கடந்த 2020/ம் ஆண்டின்போது ஃபைபர் தொழில் செய்து வரும் நபர் ஒருவருடன் நட்புறவு ஏற்பட்டு காலப்போக்கில் அவரையே இரண்டாவதாகவும் அப்பெண் திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
image
இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் மூன்றாவதாக ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் செல்வதற்காக இரண்டாவது கணவரிடம் தனது சொந்த ஊருக்குச் செல்வதாக கூறிவிட்டு மூன்றாவது நபருடன் தப்பிச் சென்றிருக்கிறார்.
ஆனால் அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லாததால் முதல் மற்றும் இரண்டாவது கணவர்கள் இருவரும் இணைந்து தங்களது மனைவியை கண்டுபிடித்து தரக் கேட்டு பரோசா சிறை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள்.
இந்த புகாரால் அதிர்ச்சியுற்றுப்போன பரோசா போலீசார், அவர்களிடம் விசாரித்ததில் வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லாததால் உள்ளூர் காவல்நிலையமான சோனேகான் போலீசாரிடம் புகார் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ALSO READ:  
இசையமைப்பாளர் ஆதித்யனுக்கு சினிமா செய்த மரியாதை இதுதானா? – மனம் நொந்த பாடகர்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.