வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு 75 மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் 75 இடங்களில் நடைபெற உள்ள யோகாதின விழாவில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2014 ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் அவரது வேண்டுகோளின் படி ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகாதினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நாட்டின் புகழ்பெற்ற தலங்களில் உள்ள பொது மைதானத்தில் பொது மக்களுடன் இணைந்து யோகாதினத்தை கொண்டாடி வருகிறார்.
இந்தாண்டுக்கான சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகரத்தில் பிரதமர் நரேந்திரமோடி யோகாதினத்தை கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மாநில நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுவிழாவை கொண்டாட உள்ளது.இதனையும் முன்னிட்டு மத்திய அமைச்சர்கள்,இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் என 75 பேர் நாடு முழுவதிலும் 75க்கும் மேற்பட்ட இடங்களில் யோகாதின விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
Advertisement