சென்னையில் மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அன்பு என்கின்ற ராஜசேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்த போலீசார், இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல்.
முதல் முதல்கட்ட தகவலின்படி, சொத்து தொடர்பான ஒரு புகாரின் பேரில் ராஜசேகரை அழைத்து வரும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைத்தில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் டிவிட்டர் பதிவில், “மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை, இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியாஅரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை,1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 12, 2022