Tamil Nadu news today live updates : தங்கம் விலை ஒரு கிராம் 24 கேரட் ஆபரன தங்கம் ரூ 5282 -க்கு, நிர்ணயம் செய்ய்பட்டுள்ளது. இதனால் ஒரு சவரன் தற்போது ரூ 42256-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ 67-க்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை
தமிழகத்தில் 22-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலையில், பெட்ரோல் விலை ரூ 102.63-க்கும், டீசல் ரூ94.24-க்கும் விற்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு
போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரின் அனுமதி பெறுவது அவசியம் என அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு தொடர்பான நடைமுறைகள் சரியாக கடைப்பிடிக்காததால் போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா 2-வது டி20
இந்தியா தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது ஏற்கனவே டெல்லியில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாலியல் புகாரில் கல்லூரி சேர்மன் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் மீண்டு 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வானிலை அறிவிப்பு
13, 14, 15- ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
குடியரசு தேர்தல் குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்த கடந்த காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன் கார்கே பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து இவர் ஆலோசிப்பார் என்றும், கொரோனா தொற்று காரணமாக சோனியாக காந்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 195.07 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், ஒரே நாளில், 13,04,427 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ₨10 லட்சம் மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்படவிருந்த நிலையில் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநகராட்சிகளுக்கு குழு அமைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் புகுந்த வேன் மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் தேவராஜன் பலியான நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்னர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி நடைபெற உள்ளது.