புதிய ஊதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு தயாராகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த புதிய ஊதிய சட்டத்தால் ஊழியர்களுக்கு சம்பளம் உயரும் என்றாலும் அந்த சம்பள உயர்வு கைக்கு வருமா? என்பது சந்தேகமே என்ற தகவல் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய ஊதிய சட்டம் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை தற்போது பார்ப்போம்.
சம்பளம்
ஒரு ஊழியருக்கான மொத்த சம்பளத்தில் ஒரு சில பிரிவுகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அடிப்படை சம்பளம் என்பது தான் ஒரு ஊழியரின் பிரதான பிரிவு. அதன்பின் வீட்டு வாடகை, பயண கட்டணம், மருத்துவப்படி உள்பட இதர படிகள், வருங்கால வைப்பு நிதி என பல பிரிவுகளில் அடங்கும்.
புதிய ஊதிய திட்டம்
இந்த நிலையில் புதிய ஊதிய திட்டத்தின்படி ஒரு ஊழியர் பெரும் சிடிசி எனக் கூறப்படும் (CTC – Cost to company) தொகையில் 50% அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. மீதமுள்ள 50% தான் மற்ற பிரிவுகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிடிசி
தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய திட்டத்தில் சிடிசி என்பது 30 முதல் 40 சதவீதம் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் இவை புதிய ஊதிய திட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சம்பளம் உயரும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
பிஎஃப் தொகை
ஆனால் அதே நேரத்தில் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்பதால் அடிப்படை சம்பளம் உயர்ந்தால் பிஎஃப் கட்டும் தொகையும் உயரும். இதனால் அடிப்படை சம்பளம் உயர்ந்தாலும், அந்த உயர்ந்த சம்பளத்தை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வருமானவரி
அதே போல் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வருமானவரி கட்டப்படுகிறது என்பதால் அடிப்படை சம்பளம் உயரும் போது கட்ட வேண்டிய வருமான வரியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HRA மீதான வரி
மேலும் புதிய விதிகளின்படி, HRA மீதான வரியும் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது. அடிப்படை சம்பள உயர்வால், HRA வும் உயரும் என்பதும், இது HRAவின் வரிக்கு உட்பட்ட பகுதியை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பள அமைப்பு
அனைத்து மாநிலங்களும் புதிய ஊதிய சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை ஒப்புக்கொண்ட பிறகு, புதிய ஊதிய திட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படும் போது, உங்கள் சம்பள அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
How your salary structure can change with the new wage code
How your salary structure can change with the new wage code | அடிப்படை சம்பளம் உயர்ந்தாலும் கைக்கு காசு வருமா? புதிய ஊதிய சட்டம் என்ன சொல்கிறது?