அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கு கடந்த ஆகஸ்ட்டில் கைதாகியிருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஷாம் வழக்கு தொடர்ந்தார்.
அதன் விசாரணையில், மீரா மிதுன் பேசுவதற்கு ஷாம் உறுதுணையாக இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.