இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் மே மாதத்தில் 7.04 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?
மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்ததன் காரணமாக ஏப்ரல் மாதம் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்கம் 7.04 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
மொத்த உணவுப் பணவீக்கம்,
ஏப்ரல் மாதம் 8.31 சதவீதம் ஆக இருந்த மொத்த உணவுப் பணவீக்கம், மே மாதம் 7.97 சதவீதம் ஆகவும், கடந்த நிதியாண்டின் (FY22) இதே காலத்தில் 5.01 சதவீதம் ஆகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து 5வது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க அளவீடுகளான 2-6 சதவீத அளவீட்டைத் தாண்டியிருக்கிறது.
எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம்
மே நுகர்வோர் எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தின் 10.80 சதவீதத்திலிருந்து 9.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், மக்களின் முக்கிய நுகர்வு பொருளான காய்கறிகளின் விலை பணவீக்கம் முந்தைய மாதத்தில் 15.41 சதவீதத்தில் இருந்து 18.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
மத்திய அரசு வெளியிட்டுள்ள சில்லறை பணவீக்கத்தின் அளவு படி கிராமப்புற சில்லறை பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதம் 8.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் கணிப்புகளை ஆர்பிஐ மறுமதிப்பீடு செய்துள்ளது.
பணவீக்க அளவுகள்
2023ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கு இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கும். இதன் படி ஜூன் காலாண்டு – 7.5%, செப்டம்பர் காலாண்டு – 7.4%, டிசம்பர் காலாண்டு – 6.2%, மார்ச் காலாண்டு – 5.8%.
அமெரிக்கா
இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் மே மாதம் 7.04 சதவீதமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் பணவீக்கம் 8.6 சதவீதமாக அதிகரித்துச் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
40 வருட உயர்வு
அமெரிக்கத் தொழிலாளர் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அளவு டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
Retail inflation fall to 7.04 percent in May
Retail inflation fall to 7.04 percent in May அமெரிக்கா-வை விட எவ்ளோவோ பெட்டர் இந்தியா.. மே மாதம் டேட்டா..!