புதுடில்லி : ‘இரு மதத்தினருக்கு இடையே, வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசியதால், பா.ஜ., அமைச்சர் மற்றும் எம்.பி., மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என கோரிய மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டில்லியில், 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. அப்போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பா.ஜ., – எம்.பி., பிரவேஷ் வர்மா ஆகியோர், இரு மதத்தினருக்கு எதிராக, வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசியதாக, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் டி.எம்.திவாரி ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைஅடுத்து, பிருந்தா காரத், டி.எம்.திவாரி இருவரும், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த மார்ச்சில், இந்த மனுவின் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.அதன் விபரம்:மனுதாரர் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது சரியே.
சட்டப்படி மத்திய அரசின் அனுமதியின்றி அமைச்சர், எம்.பி., ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, மனுதாரர்களின் மனு தள்ளு படி செய்யப்படுகிறது.முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும். பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement