ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை திடீரென ஆப்கானிஸ்தான் வீரர்கள் தாக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இந்தநிலையில், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நடுவே முதலில் வாக்குவாதமாக நடைபெற்ற சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒரு ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வீரர் இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவின் முகத்தில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டு நடுவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர்.