திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை 5 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
குன்னியூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குரைத்து அபயக்குரல் எழுப்பிய நாய்க்குட்டியை பார்த்த மூர்த்தி என்பவர், தீயணைப்புத் துறையின் உதவியை நாடினார்.
இதையடுத்து நாய்க்குட்டியை வெளியே கொண்டுவர கையாண்ட உத்திகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடிக்கு மற்றொரு குளியை தோண்டினர்,
பின்னர், அதில் இறங்கிய தீயணைப்புத் துறையினர், ஆழ்துளை கிணற்றில் துளையிட்டு பத்திரமாக மீட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM