இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
எளிமையான கிராமத்துக் கதையில் உறவுகளின் வலி மற்றும் வலிமையை அழகாக திரையில் காட்டி வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரின் இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு வருகிற ஜுன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் ‘இடிமுழக்கம்’. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் கத்தியுடன், எண்ணெய் வழிந்த தேகத்துடன் கிராமத்து இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் அந்த ஃபோஸ்டரில் உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். ‘மாமனிதன்’ படத்திற்குப் பிறகு 2-வது முறையாக சீனு ராமசாமி படத்தில் காயத்ரி நடித்துள்ளார்.
Happy to launch @Seenuramasamy‘s #Idimuzhakkam FIRST LOOK
Produced by@Kalaimagan20 @mu_fathima @SkymanFilms
VetriThamizhan @gvprakash@SGayathrie #SaranyaPonvannan @Actor_ArulDass @soundar4uall @NRRaghunanthan @ARASHOKKUMAR05 @premartdirector @thamizh_editor @Vairamuthu pic.twitter.com/pUerPSid0c
— Udhay (@Udhaystalin) June 13, 2022
மேலும், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு, ஆக்ஷன் த்ரில்லராக கிராமத்துப் பின்னணியில் ‘இடிமுழுக்கம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு என்.ஆர். ரகுநாதன் இசையமைக்க, ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.