உலகில் முதல் முதலாக இன்டர்நெட் பயன்பாடு தொடங்கப்பட்டபோது பிரெளசர் பயன்பாடும் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே.
ஆரம்ப காலத்தில் பிரெளசர் என்றால் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மட்டுமே இருந்தது என்பதும் இந்த பிரெளசர் கடந்த 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் வேறு வழியின்றி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 15ஆம் தேதி முதல் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இண்டர்நெட் எக்ஸ்பிளோரர்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரை வரும் 15ம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளதால் 27 ஆண்டுகால இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரலாறு முடிவுக்கு வருகிறது.
போட்டி பிரெளசர்கள்
முதன்முதலில் இணையத்தை பயன்படுத்தும் போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரெளசரை தான் வங்கிகள் உள்பட பல முக்கிய நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. ஆனால் அதன்பின் கூகுள் குரோம் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. புதிய போட்டியாக மொசில்லா பயர்பாக்ஸ் வந்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டதால் மற்ற பிரவுசர்களுடன் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரால் போட்டி போட முடியவில்லை என்பதால் தற்போது சேவையை நிறுத்தும் முடிவை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.
சேவை நிறுத்தம்
2022 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உடன் தனது சேவையை முழுமையாக நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
95% பயனர்கள்
1996 ஆம் ஆண்டு ஆரம்பித்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரெளசர், கடந்த 2003ஆம் ஆண்டு வரை இணையத்தை பயன்படுத்துபவர்களில் 95% பயனர்களை கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் குரோம், பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்கள் பயனாளிகளை கவர்ந்த நிலையில் இன்டர்நெட் எக்ஸ்பிளோர் பயன்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது.
மைக்ரோசாப்ட் எட்ஜ்
2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்பிளோர் பிரவுசரை அப்டேட் செய்யவில்லை என்பதும் இதன் பயன்பாடு குறைவதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்திய பல பயனாளர்கள் தற்போது மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Microsoft is shutting down Internet Explorer after 27 years!
Microsoft is shutting down Internet Explorer after 27 years! | இண்டர்நெட் எக்ஸ்பிளோருக்கு மூடுவிழா: முடிவுக்கு வந்தது 27 ஆண்டுகால வரலாறு!