இந்த புல்டோசர் சீனா பக்கம் போகாதா?

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், கார்ட்டுனிஸ்ட்கள், அரசியல்வாதிகள் போல, மீம்ஸ் கிரியேட்டர்களும் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். உ.பி.யில் புல்டோசர்களை வைத்து வீடுகளை இடித்தது குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் சாட்டையை சுழற்றியுள்ளனர்.

இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

திமுக சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், உ.பி.-யில் புல்டோசர் வைத்து வீடுகளை இடிப்பது குறித்து மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சொந்த நாட்ல சீனா ஆக்கிரமிச்சத இடிக்க வராத புல்டோசர்… நபிகள் நாயகத்த தப்பா பேசின சங்கிய அரெஸ்ட் பண்ண சொல்லி போராட்டம் பண்ணவங்க வீட்ட இடிக்க மட்டும் வருதா?” என்று கேட்கும் மீம்ஸ் போட்டு, இந்த புல்டோசர் சீனா பக்கம் போகாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வசந்த் என்ற பெயரில் உள்ள் ட்விட்டர் பயனர், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!” என்ற செய்தியைக் குறிப்பிட்டு, “நாட்டை சுத்தி அனுமார் சிலை இருக்கு வீட்டை இடிக்க புல்டோசர் இருக்கு வேற என்ன வேணும் எங்களுக்கு.” என்று மீம்ஸ் மூலம் பாஜகவினரை கிண்டல் செய்துள்ளார்.

நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “சீனா இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவுகிறது என்று இரண்டாவது முறையாக அமெரிக்கா எச்சரித்ததாகக் குறிப்பிட்டு, இந்தியாவின் பாராமுகத்தை உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

பலே பாலு என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய நிதி துறை செயலர் கூறியதற்கு, “பொருளாதாரம் எங்கம்மா வளருது… விலைவாசி தான் வேகமா ஏறுது” என்று வடிவேலு மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.

ஹராப்பன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், சீமானையும் பாஜகவையும் ஒப்பிட்டு, ஒரு கடுமையான விமர்சனம் மீம்ஸ் போட்டுள்ளார். அதில், “சாதி – குடி

ஆணவக்கொலை – குடிப்பெருமைக்கொலை

பிராமின் – தமிழ் அந்தணர்

வர்ணாசிரமம் – தொழிற்முறை அடுக்கு

இந்து – தமிழ் இந்து

சன்மார்க்கம் – சைவம்,மாலியம்

யோகா – ஓகக்கலை

தந்தை பெரியார் பாபாசாகேப் அம்பேத்கர் – பாரதி பாட்டன்,உ.வே.சா முப்பாட்டன்

சங்கி – தம்பி” என்று குறிப்பிட்டு, சீமான் மார்பைப் பிளந்தால் மோடி தெரிவது போன்ற மீம்ஸ் போட்டுள்ளார்.

இதற்கு இடையே, ஸ்பெனர், நட், பொல்ட் வைத்து செய்யப்பட்ட ஒரு தேள் படத்தை பதிவிட்டு, “நாடி நரம்பெல்லாம் மெக்கானிக் மூளை ஊறிப்போனவரோட செயல்தான் இது” என்று மீம்ஸ் படம் போட்டுள்ளனர்.

விக்ரம் படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், “நான் சொல்லும்போது ஒருத்தரும் நம்பல…” “இப்போ கோடி கோடியா கொட்டிட்டு இருக்கு .. என்று அரங்கத்தை அதிரவிட்ட கமல்” பேசியதைக் குறிப்பிட்டு, காதலன் படத்தில் வடிவேலு – பிரபு தேவா மீம்ஸ் போட்டு ‘ம்ம்ம் கண்ட்டினியூ’ என்று கலாய்த்துள்ளார் தமிழ் மிட் விக்கெட் மீம்ஸ் பயனர்.

ஜோ என்ற ட்விட்டர் பயனர், “நார்த் இந்தியால முஸ்லீம்ஸ்க்கு எதிரா பெரிய பிரச்சனை நடக்குதே, உண்மையா?! மீடியா ~ அதவிடு, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஹனிமூன்க்கு எங்க போக போறாங்க தெரியுமா..?!” மீடியாக்களை மீம்ஸ் மூலம் இடித்துரைத்துள்ளார்.

ஜோ மற்றொரு மீம்ஸில், “படிக்காமலே சாதிக்கலாம் என்றொருவர் சொன்னால் அது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல!” என்று ஸ்டாலின் சொன்ன அறிவுரையைக் குறிப்பிட்டு, “டேய் ஆடு மேய்ப்பின் மூலம் மாதம் 60000 வருமானம், பூ கட்டுவதன் மூலம் 1 லட்சம் வருமானம்னு சொல்வியே, இப்ப சொல்றா” என்று கடுமையான மீம்ஸ் போட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.