தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 18 மாதங்களாவது ஆகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியா அரசு பல வழிகளில் இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும், சீனாவும் கடனுதவி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலைமையை சீராக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோருவதாகவும், நட்பு நாடுகளுடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார்.
இதனிடையே, இலங்கை அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.