கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாகவழங்க இலங்கை நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது.
அதானிக்கு மின் உற்பத்தித் திட்டத்தை ஒதுக்கீடு செய்யவே சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்வதாக இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையெடுத்தே மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோவை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசார ணைக்கு அழைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தவிசாரணையில் ‘எதன் அடிப்படையில் 500 மெகாவாட் திட்டத்துக்கு அதானி குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டது’ என்று அக்குழு பெர்டினான்டோவிடம் கேள்வி எழுப்பியது.
‘500 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே என்னிடம் கூறினார்’ என்று அந்த விசாரணையின்போது அவர் தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து தற்போது இலங்கையில் மட்டு மல்லாது இந்தியாவிலும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே ட்விட்டரில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து பெர்டினான்டோ தனது கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்.