வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (13) நியமித்தார்.
இதன் போது ,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தலைவர் ,பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்தார்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான திரு. ஜே. யோகராஜ் தனது நியமனக்கடிதத்தை அமைச்சரிடம் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பான நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்றது.