இலங்கை கல்வி நிர்வாக சேவையின் போட்டிப் பரீட்சை

நாடாளாவிய ரீதியில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 700 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், தேசிய பாடசாலைகள் என்பவற்றில் வெற்றிடங்கள் இதற்கமைவாக பூரணப்படுத்தப்பவுள்ளன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மூன்று வாரங்களில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.