கொழும்பு,
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.
இதன்பின்னர் சில மணி நேரங்களில், தாம் கோப் குழுவில், ஜனாதிபதி கோத்தபய பற்றி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்றும் உணர்ச்சிவசப்பட்டு, அவ்வாறு கூறியதாகவும் பெர்டினாண்டோ குறிப்பிட்டிருந்தார்.
மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர இந்திய பிரதமர் மோடி வற்புறுத்தியதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்திய பிரதமர் மோடி மீது பெர்டினாண்டோ புகார் தெரிவித்திருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை மன்னார் காற்றலை மின்சார திட்டத்தை அதானியின் நிறுவனத்திற்கு வழங்க தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்துள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.