உறவினர் சிதையில் விழுந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் பீரித்தி டாங்கி. இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை வாயலில் சென்றூ தேடியுள்ளனர்.
அப்போது அவர் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அவரை அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர். அங்கு வந்த ப்ரீத்தியின் உறவினரான கரண் என்ற 21 இளைஞர் அவரது இழப்பை தாங்காமல் அவரின் சிதையிலேயே விழுந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.