இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நாட்டிங்காமில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர் டாம் லாதம் முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் போல்டனார்.
The perfect start and Test wicket number 6️⃣5️⃣0️⃣ for @jimmy9 🙌
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/PLFNZU6P2k
— England Cricket (@englandcricket) June 13, 2022
இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனின் 650வது விக்கெட் ஆகும். 171 போட்டிகளில் 318 இன்னிங்சில் ஆண்டர்சன் 650 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார். 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் முத்தையா முரளிதரனும், 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் ஷேன் வார்னே உள்ளனர்.
மேலும் புதிய வரலாற்று சாதனை ஒன்றை ஆண்டர்சன் படைத்துள்ளார். 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஆண்டர்சன், இன்று வரை 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசுகிறார். அதிலும் அவர் நினைத்தபடி பந்தை ஸ்விங் செய்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் இந்த அளவுக்கு செயல்பட்டதில்லை. ஆண்டர்சனுக்கு தற்போது 39 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Twitter